அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையத்தை ஒதுக்குவது உலக பொதுச் சுகாதார ஒத்துழைப்புக்குத் தீங்கு விளைவிக்கும்: டி லன்செட்

அமெரிக்க அரசு அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையத்தை இடைவிடாமல் ஒதுக்கி வைப்பதால்,
அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையத்தை ஒதுக்குவது உலக பொதுச் சுகாதார ஒத்துழைப்புக்குத் தீங்கு விளைவிக்கும்: டி லன்செட்

அமெரிக்க அரசு அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையத்தை இடைவிடாமல் ஒதுக்கி வைப்பதால், அறிவியல் மற்றும் பொதுச் சுகாதார துறையில் உலக ஒத்துழைப்புக்குத் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று டி லன்செட் எனும் பிரிட்டனின் அறிவியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1946ஆம் ஆண்டு முதல், இந்த மையம், அமெரிக்காவின் பொதுச் சுகாதாரத் துறையின் தேசிய ஆதாரத்தூணாக மாறியுள்ளது. உலகப் புகழ் வாய்ந்த இம்மையத்தில் பயிற்சி பெற்ற நிபுணர்கள், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிகளவில் பங்காற்றியுள்ளனர் என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

கொவைட்-19 நோய் பரவத் தொடங்கிய காலத்தில் வைரஸ் கண்டறிதல் ஆகியவற்றில் இம்மையம் தவறுகளைச் செய்தது ஐயமில்லை. இருந்த போதிலும் இம்மையத்தை ஓரங்கட்டுவது மற்றும் அதன் பங்கை பலவீனப்படுத்துவது சிக்கலை தீர்க்க உதவாது என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

பொது சுகாதாரத் துறையிலுள்ள அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில், அமெரிக்காவுக்கோ, உலகத்துக்கோ, வலிமை மிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வேண்டும். இதன் மூலம் தான், அடுத்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com