போக்குவரத்துத் துறையில் சீனா முன்னேற்றம் மற்றும் சாதனைகள்

2020ஆம் ஆண்டுக்குள், சீனாவில் இயங்கி வரும் இருப்புப் பாதையின் மொத்த நீளம் 1 லட்சத்து 46ஆயிரம் கிலோமீட்டராக இருக்கும்.
போக்குவரத்துத் துறையில் சீனா முன்னேற்றம் மற்றும் சாதனைகள்

2020ஆம் ஆண்டுக்குள், சீனாவில் இயங்கி வரும் இருப்புப் பாதையின் மொத்த நீளம் 1 லட்சத்து 46ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும்.

2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் சுமார் 99 விழுக்காடு வரை இருப்புப் பாதை வலைப்பின்னலில் இணையும். இதில், அதிவிரைவு தொடர்வண்டி இயங்கும் இருப்பு பாதையின் மொத்த நீளம் 39 ஆயிரம் கிரோமீட்டருக்கும் மேலாக அதிகரிக்கும்.

இது உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது என்று மே 19-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனப் போக்குவரத்து துறை அமைச்சர் லீ சியெளபெங் கூறினார்.

தவிர, நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 51 இலட்சம் கிலோமீட்டரை எட்டும். உள்நாட்டில் நீர்வழிப் போக்குவரத்து நீளம் 1 லட்சத்து  27 ஆயிரம் கிலோமீட்டராகும்.  பயணியர் விமான நிலையங்களின் எண்ணிக்கை 243ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com