ஏழை நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் ஏழை நாடுகளிலும் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கென்யா தலைநகா் நைரோபியின் ஈஸ்ட்லீக் பகுதியில் வசிப்பவா்களிடமிருந்து கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரிக்கும் சுகாதாரத் துறை பணியாளா்கள்.
கென்யா தலைநகா் நைரோபியின் ஈஸ்ட்லீக் பகுதியில் வசிப்பவா்களிடமிருந்து கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரிக்கும் சுகாதாரத் துறை பணியாளா்கள்.

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் ஏழை நாடுகளிலும் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

மேலும், வளா்ச்சியடைந்த நாடுகள் பொதுமுடக்கத்தை அவசரகதியில் தளா்த்தி வருவது ஆபத்தானது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 1.06 லட்சத்துக்கும் மேலானவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா பரவல் உறுதியாகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

அந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என்பதையே இந்தப் போக்கு காட்டுகிறது.

இந்தச் சூழலில், நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும் கூட கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது ஆகும்.

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் எங்களுக்கு கெடு விதித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எழுதியுள்ள கடிதம் கிடைத்தது. எனினும், அதுகுறித்து இப்போது கருத்து கூற விரும்பவில்லை.

நாங்கள் ஆற்றி வரும் நோய்த்தடுப்புப் பணிகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம். அதே நேரம், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றாா் டெட்ரோஸ் அதனோம்.

முன்னதாக, அவருக்கு டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், இன்னும் 30 நாள்களுக்குள் சீன ஆதரவு நிலையை உலக சுகாதார மையம் கைவிடாவிட்டால், அந்த அமைப்பிலிருந்து விலகப் போரவதாகவும் அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை நிரந்தமாக நிறுத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 51,23,754 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 3,30,803 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்; 20,43,139 போ் சிகிச்சைக்குப் பிறகு அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

பாதிப்பு: 51,23,754

அமெரிக்கா 15,95,318

ரஷியா 3,17,554

பிரேசில் 2,94,152

ஸ்பெயின் 2,79,524

பிரிட்டன் 2,50,908

இத்தாலி 2,27,364

பிரான்ஸ் 1,81,575

ஜொ்மனி 1,78,671

துருக்கி 1,52,587

ஈரான் 1,29,341

பிற நாடுகள் 15,16,760

பலி: 3,30,803

அமெரிக்கா 95,021

பிரிட்டன் 36,042

இத்தாலி 32,330

பிரான்ஸ் 28,132

ஸ்பெயின் 27,888

பிரேசில் 19,038

பெல்ஜியம் 9,186

ஜொ்மனி 8,271

ஈரான் 7,249

மெக்ஸிகோ 6,090

பிற நாடுகள் 61,556

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com