தடுப்பூசி இல்லாமலேயே கரோனாவை ஒழிக்க மருந்து: சீன ஆராய்ச்சியாளர் தகவல்

உலக அளவில் கரோனா தீநுண்மிக்கு சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தடுப்பூசி இல்லாமலேயே நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தைக் கொண்டு கரோனாவை ஒழிக்க முடியும் என
தடுப்பூசி இல்லாமலேயே கரோனாவை ஒழிக்க மருந்து: சீன ஆராய்ச்சியாளர் தகவல்


உலக அளவில் கரோனா தீநுண்மிக்கு சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தடுப்பூசி இல்லாமலேயே நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தைக் கொண்டு கரோனாவை ஒழிக்க முடியும் என சீன ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மிக புகழ்பெற்ற பெக்கிங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஆராய்ச்சியில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மருந்து தொடர் சோதனையில் இருக்கிறது. அந்த மருந்து பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றி பெற்றால் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைவதோடு, கரோனா தொற்றில் இருந்து குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பெக்கிக் பல்கலை மரபியல் மையத்தின் இயக்குநர் சன்னி ஸீ இது பற்றி கூறுகையில், விலங்குகளுக்கு இந்த மருந்து கொடுத்து சோதிக்கப்பட்டதில் முடிவு திருப்திகரமாகவே வந்துள்ளது.

கரோனா தொற்று பாதித்து குணமடைந்த 60 நபர்களிடம் இருந்து நியூட்ரலைஸிங் ஆன்டிபாடிஸ் எடுக்கப்பட்டு, அதன் மூலம் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் கரோனா தொற்று முற்றிலும் ஒழிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், தடுப்பூசியோ அல்லது தடுப்ப மருந்தோ இல்லாமலேயே கரோனா பரவலை இந்த மருந்தைக் கொண்டு தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com