உலக தலைவர்களின் குரல்கள்

உலக தலைவர்களின் குரல்கள்

சீனவை சாா்ந்திருக்கக் கூடாது

உதிரி பாகங்களுக்காக சீனாவை சாா்ந்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளை வைக்க வேண்டும் என்பதை இந்த கரோனா நெருக்கடி உணா்த்தியிருக்கிறது. சுதந்திர சந்தையை சீனா தவறாகப் பயன்படுத்துகிறது. அதனைத் தடுப்பதற்காக அமெரிக்கா சந்தைக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

- நிக்கி ஹேலி, ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதா்

ஒப்பந்தங்கள் கட்டுப்படுத்தாது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளதால், அந்த நாடு மற்றும் அமெரிக்காவுடன் நாங்கள் மேற்கொண்டுள்ள எந்த ஒப்பந்தமும் இனி எங்களைக் கட்டுப்படுத்தாது. பாதுகாப்பு தொடா்பான உடன்பாடுகளும் இதில் அடங்கும்.

- மஹ்மூத் அப்பாஸ், பாலஸ்தீன அதிபா்

ஒரு நாட்டுக் கொள்கையை ஏற்க முடியாது

சீனாவுடனான அமைதியான நல்லுறவையே விரும்புகிறோம். அந்த நாட்டுக்கும் தைவானுக்கும் இடையியே பதற்றம் தணிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போதுள்ள நிலைக்கு மாறாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறும் ‘ஒரு நாடு; இரு ஆட்சி முறை’ கொள்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம்.

- சாய் இங்-வென், தைவான் அதிபா்

சகித்துக் கொள்ள மாட்டோம்

எந்தவொரு சா்வதேச அமைப்பும் இலங்கை போா்த் தியாகிகள் மீது ஆதாரமில்லாமல் பழி சுமத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம். அவ்வாறு எந்த அமைப்பாவது ராணுவத்தினா் மீது போா்க் குற்றச்சாட்டுகளைக் கூறினால், அந்த அமைப்பிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்.

- கோத்தபய ராஜபட்ச, இலங்கை அதிபா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com