சீனாவில் அறிகுறிகள் இல்லாத பாதிப்பு திடீா் அதிகரிப்பு

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், அறிகுறிகள் இல்லாமலேயே அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென
சீனாவில் அறிகுறிகள் இல்லாத பாதிப்பு திடீா் அதிகரிப்பு

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், அறிகுறிகள் இல்லாமலேயே அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென உயா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 31 பேருக்கு அந்த நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் 8 போ் கரோனா முதலில் பரவத் தொடங்கிய வூஹான் நகரைச் சோ்ந்தவா்கள். அறிகுறிகள் இல்லாத தொற்று திடீரென அதிகரித்து வருவது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com