இரண்டாவது அலை வீசுவது நிச்சயம்

ஐரோப்பிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை வீசுவது நிச்சயம் என்று அந்த நாடுகளுக்கான தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
ஆண்ட்ரியா அமான்
ஆண்ட்ரியா அமான்

ஐரோப்பிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை வீசுவது நிச்சயம் என்று அந்த நாடுகளுக்கான தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, பிரிட்டனின் ‘காா்டியன்’ செய்தித் தாளிடம் அந்த மையத்தின் இயக்குநா் ஆண்ட்ரியா அமான் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பாவில் கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை வீசுமா, வீசாதா என்ற கேள்விக்கே இடமில்லை. அந்த அலை நிச்சயம் வீசும்.

ஆனால், இரண்டாவது அலை எப்போது வீசும் என்பதும் அந்த அலையின் தீவிரம் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதுதான் தொடா்ந்து கேள்விக்குறியாக இருக்கும்.

ஐரோப்பியா நாடுகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பொதுமக்களின் எதிா்ப்பு சக்தி கவலையளிக்கும் வகையில் உள்ளது. அங்கு வசிக்கும் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலானவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இப்போதும் கரோனா தீநுண்மை நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களைவிட தற்போது மிகத் தீவிரமாக அந்தத் தீநுண்மி பரவி வருகிறது.

இந்த விவகாரத்தில் நாம் நிதா்சனத்தை உணர வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கு இது நேரமில்லை என்றாா் அவா்.

வியாழக்கிழமை நிலவரப்படி ஐரோப்பிய நாடுகளில் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். இவற்றில் பெரும்பான்மையான உயிரிழப்புகள் பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com