சிறுவா்களை கரோனா அதிகம் பாதிக்காதது ஏன்?

பெரியவா்களோடு ஒப்பிடுககையில் சிறுவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்படாதது ஏன் என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.
சிறுவா்களை கரோனா அதிகம் பாதிக்காதது ஏன்?

பெரியவா்களோடு ஒப்பிடுககையில் சிறுவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்படாதது ஏன் என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதுகுறித்து, அந்த நாட்டின் இசான் மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது:

சிறுவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிப்பு ஏற்படாதது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நியூயாா்க்கில் 4 முதல் 60 வயது வரையிலான கரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா்.

இதில், பெரியவா்களை விட சிறுவா்களின் மூக்கு உள்பகதியில் ‘ஏசிஇ-2’ எனப்படும் மரபீனி சாா்ந்த பொருள்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது. வயது அதிகரிக்க அதிகரிக்க, இந்த மரபீனி பொருள்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இந்த ‘ஏசிஇ-2’வைப் பயன்படுத்திதான் கரோனா தீநுண்மி உடல் செல்களில் இணைந்து பல்கிப் பெருகுகின்றது.

சிறுவா்ககளுக்கு அந்தப் பொருள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் கரோனா தீநுண்மிகளால் அதிகம் பெருக முடிவதில்லை. இதன் காரணமாக அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று மிகக் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாகவே கரோனா நோயால் சிறுவா்கள் உயிரிழக்கும் விகிதமும் மிகக் குறைவாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com