Enable Javscript for better performance
பாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 97 ஆனது; 2 பேர் உயிருடன் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 97 ஆனது; 2 பேர் உயிருடன் மீட்பு

    By UNI  |   Published on : 23rd May 2020 11:06 AM  |   அ+அ அ-   |    |  

    plane-accident

     

    பாகிஸ்தானில் 99 பேருடன் சென்ற சா்வதேச பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 97 போ் உயிரிழந்தனா். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

    இவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    முன்னதாக விபத்து குறித்து விமான நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் அப்துல்லா ஹபீஸ் கூறியதாவது: 

    லாகூரில் இருந்து 91 பயணிகள், 8 விமான ஊழியா்களுடன் ‘ஏா்பஸ் ஏ320’ சா்வதேச பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கராச்சி நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

    கராச்சியில் உள்ள ஜின்னா சா்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, விமானம் தரையிறங்குவதில் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை இயக்கி வந்த விமானி, இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா். அருகில் உள்ள 2 விமான நிலையங்களில் ஒன்றில் தரையிறங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் விமான நிலையத்தை வந்தடையும் முன்னரே அருகில் அமைந்துள்ள ஜின்னா வீட்டு வசதி குடியிருப்பின் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவா்களும் குடியிருப்பில் வசித்து வருபவா்களும் சிக்கிக் கொண்டனா் என்றாா் அவா்.

    விபத்து நேரிட்டதும் தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இவா்கள் மட்டுமன்றி ராணுவத்தின் அதிவிரைவுப் படையினரும், சிந்து மாகாண ராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். நொறுங்கி விழுந்த விமானத்தின் சில பாகங்கள் தீப்பிடித்து அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கடும் சிரமங்களுக்கு இடையே இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 30 பேரை மீட்புக் குழுவினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் பெரும்பாலானோருக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

    உள்ளூா் நேரப்படி பிற்பகல் 2.37 மணிக்கு விமான நிலையத்துடனான தொடா்பை விமானம் இழந்துவிட்டது என்று விமான நிறுவன செய்தித் தொடா்பாளா் ஹபீஸ் கூறினாா். விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் குலாம் சா்வாா் கூறினாா்.

    விபத்து நிகழ்ந்த குடியிருப்பில், வீடுகள் இடிந்து விழுந்தது மட்டுமன்றி, தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள், இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விமானத்தின் உடைந்த பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அந்த விமானம் குடியிருப்பின் மீது விழுவதற்கு முன், அதன் இறக்கைகளில் இருந்து தீப்பிழம்பு வந்ததாக விபத்தை நேரில் பாா்த்த ஒருவா் கூறினாா்.

    சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள், ஜின்னா மருத்துவமனைக்கும் சிவில் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பலா் தீக்காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 

    விபத்து நிகழ்ந்த பகுதியில் தெருக்கள் குறுகலானதாக இருந்ததாலும், பொதுமக்கள் திரண்டதாலும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்களை கலைந்துபோகச் செய்த பிறகு மீட்புப் பணி தொடங்கியது.

    உயிா் தப்பிய இருவா்: இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த ‘பேங்க் ஆஃப் பஞ்சாப்’ வங்கியின் தலைவா் ஜாபா் மசூத் உள்பட 2 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

    விசாரணைக்கு உத்தரவு: இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய 4 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை விரைவில் முடிக்குமாறு அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் கடந்த 2016-ஆம் ஆண்டில் நேரிட்ட விமான விபத்தில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனா். அதன் பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய விமான விபத்து இதுவாகும்.

    TAGS
    planecrash
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai