'இனி நீ அழு'.. முன்னாள் காதலனுக்கு பரிசாக லாரியில் வெங்காயம் அனுப்பிய சீனப் பெண்

முன்னாள் காதலனைப் பழிவாங்க புதுவிதமாக யோசித்த சீனப் பெண் ஒருவர் லாரி முழுவதும் வெங்காயத்தை நிரப்பி அதனை முன்னாள் காதலன் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
'இனி நீ அழு'.. முன்னாள் காதலனுக்கு பரிசாக லாரியில் வெங்காயம் அனுப்பிய சீனப் பெண்

பெய்ஜிங்: தன்னை விட்டுப் பிரிந்து சென்ற முன்னாள் காதலனைப் பழிவாங்க புதுவிதமாக யோசித்த சீனப் பெண் ஒருவர் லாரி முழுவதும் வெங்காயத்தை நிரப்பி அதனை சீன காதலர் தின பரிசாக அனுப்பியுள்ளார்.

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் ஒரு லாரி வெங்காயத்தை வாங்கி அதனை தனது முன்னாள் காதலன் வீட்டு முன்பு கொட்டியுள்ளார். அதோடு, 'நான் அழுதுவிட்டேன், இது உன் முறை' என்றும் அந்த பரிசோடு ஒரு வாசகத்தையும் அவர் இணைத்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் நிறுவனத்திடம் வெங்காயத்தை வாங்கி அதனை, தனது முன்னாள் காதலன் வீட்டு வாசலில், கதவைத் தட்டாமல் கொட்டிவிட்டு வந்துவிடுமாறு கூறியுள்ளார்.

'காதல் முறிந்து போனதால், சீனாவில் கொண்டாடப்படும் அந்த மூன்று காதலர் தினத்திலும் நான் அழுது கொண்டே இருந்தேன். தற்போது உன்னுடைய முறை என்று எழுதி, தான் அனுப்பிய பழிக்குப் பழி பரிசுப் பொருளில் இணைத்துவிட்டேன்' என்கிறார் சற்று மலர்ந்த முகத்துடன்.

மேலும், அந்த இளைஞரை தான் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்ததாகவும், காரணமின்றி அவர் தன்னுடனான காதலை முறித்துக் கொண்டார். இது எனக்கு மிகப்பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவன் அழவே இல்லை. அதனால்தான் அவனது கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்றதொரு பரிசை தேர்வு செய்தேன்.

பணம் என்பது ஒன்றுமில்லை. ஆனால் உணர்வு, இரு நபர்களுக்கும் இடையேயான உணர்வு அற்புதமானது. அதில் நான் மட்டும் அழுவதை விரும்பவில்லை என்றும் ஸாவோ கூறுகிறார்.

சீனாவில் மூன்று வெவ்வேறு நாட்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதி, அடுத்தது சீனாவின் லூனார் காலண்டரில் ஜூலை மாதத்தில் ஒன்று.

அடுத்த ரொமாண்டிக் தேதியாக, சீனாவில் உள்ள இளசுகளுக்கு மிகவும் பிடித்த காதலர் தினம் மே 20ம் தேதி சீனாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது மாண்டரின் உச்சரிப்பில் ஐந்து இரண்டு பூஜ்யம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஐ லவ் யூ என்ற வார்த்தையைப் போன்று உச்சரிக்கப்படுவதால், அந்த நாளில் காதலர்கள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

எனவே, அந்த நாளில் நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு இருந்தேன். எங்களுக்குள் காதல் முறிந்துவிட்டது அக்கம்பக்கத்தினருக்கும் தெரிந்து பேசுபொருளாகிவிட்டது.

'காதல் முறிந்ததை நினைத்து அவர் அழுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. எனவேதன் இவ்வாறு செய்தேன்' என்கிறார்.

முன்னாள் பாதலியின் விபரீதி யோசனைனயால், இருவரும் வாழும் அந்தப் பகுதி முழுவதும் வெங்காயம் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com