வியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை

வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், சுமார் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை


வியத்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், சுமார் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியத்நாமில் உள்ள சாம் கோயில் யுனெஸ்கோவின் உலக புராதானப் பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த சாம் கோயில் வளாகத்தில நடத்தப்பட்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்களின் ஆய்வில், 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் இந்த சிறந்த கண்டுபிடிப்பால், இந்தியா - வியத்நாம் இடையே இருக்கும் கலாசார உறவு மேம்படும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக தொடர்பு வெளிப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com