கனடாவின் நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது: ஹுவாவெய் தொழில் நிறுவனம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அளித்த தீர்ப்பின்படி,
கனடாவின் நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது: ஹுவாவெய் தொழில் நிறுவனம்


 
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அளித்த தீர்ப்பின்படி, ஹுவாவெய் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குநர் மெங் வன்ஜோவுக்கு எதிரான ஒப்படைப்பு வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  

மெங்கிற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகள் "இரட்டை குற்றவியலு"க்கான ஒப்படைப்பு வரையறைக்குப் பொருந்தியது.  ஆகவே மெங் மீது சாட்டப்பட்ட குற்ற வழக்கு கனடாவில் தொடர்ந்து விசாரணை செய்யப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பு குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள ஹுவாவெய் நிறுவனம், "திருமதி மெங் நிரபராதி என்று நாங்கள் எப்போதும் நம்புவதாகவும், நியாயமான தீர்ப்பையும் சுதந்திரத்தையும் கோருவதில் நாங்கள் அவருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம்’’ என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com