வெளிநாட்டு அரசு விலக்களிப்பு சட்டம் என்றால் என்ன?

சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும், பெய்ஜிங் மாநகரின் சமூக அறிவியல் கழகத்தின் சட்டவியல் ஆய்வகத்தின் ஆய்வாளருமான மாயீதே
வெளிநாட்டு அரசு விலக்களிப்பு சட்டம் என்றால் என்ன?

சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும், பெய்ஜிங் மாநகரின் சமூக அறிவியல் கழகத்தின் சட்டவியல் ஆய்வகத்தின் ஆய்வாளருமான மாயீதே செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, சீன நிலைமைக்கு இணங்க வெளிநாட்டு அரசு விலக்களிப்பு சட்டத்தை வெகுவிரைவில் வகுக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

நாட்டு விலக்களிப்பு என்பது ஒரு நாடு தனது நாட்டின் இறையாண்மை மற்றும் நாட்டுச் சமத்துவம் என்ற கோட்பாட்டின் படி, பிற நாடுகளால் நிர்ணயிக்கப்படும் அதிகார நிலையை ஏற்றுக்கொள்ளாத சிறப்பு உரிமையாகும். இது,

நாட்டுச் சமத்துவத்தின் இன்றியமையாத விளைவாகும். தற்போது நிலவி வரும் சிக்கலான சர்வதேச நிலைமை மற்றும் நோய்த் தடுப்பினை முறைப்படுத்தும் பின்னணியில் இம்முன்மொழிவானது, பல பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. பெய்ஜிங் பிரதிநிதிக் குழுவில் உள்ள 35க்கும் மேற்பட்டோர் இக்கருத்துருவில் கையொப்பமிட்டு இக்கருத்துருவைக் கூட்டாக முன் வைத்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட சீனத் தேசிய மக்கள் பேரவையின் கருத்துரு குழு, இது குறித்து ஆய்வதற்காக இக்கருத்துருவைத் தொடர்புடைய ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com