அமெரிக்க அதிபர் டிரம்பின் 2 பதிவுகளை தவறானவை என்று அடையாளம்காட்டிய சுட்டுரை

அஞ்சல் வாக்குக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட இரண்டு பதிவுகளை தவறானவை என்றும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் சுட்டுரை அடையாளப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் 2 பதிவுகளை தவறானவை என்று அடையாளம்காட்டிய சுட்டுரை


அஞ்சல் வாக்குக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட இரண்டு பதிவுகளை தவறானவை என்றும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் சுட்டுரை அடையாளப்படுத்தியுள்ளது.

அஞ்சல் வாக்குகள் மூலம் தேர்தலை நடத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட இரண்டு பதிவுகளும் தவறானவை என்றும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அடையாளப்படுத்தியிருக்கும் சுட்டுரை, அந்தப் பதிவுகளை வெறும் படிக்க மட்டுமே இயலும் சுட்டுரையாகவும் மாற்றியுள்ளது.

சுட்டுரையின் விதிமுறைகளுக்கு முரணாக, வன்முறையைத் தூண்டும் வகையில் இந்தப் பதிவுகள் இருப்பதாகவும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும்  வகையில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த சுட்டுரைக்குக் கீழே குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த சுட்டுரை, விதிகளுக்கு முரணாகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தாலும், அதனை நீக்காமல் இருப்பதற்குக் காரணம், இந்தப் பதிவு பொதுமக்களின் விருப்பத்துக்காக, நீக்கப்படாமல், அணுகக் கூடிய வகையிலேயே வைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டுரை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அஞ்சல் முறையில் வாக்குப்பதிவு நடத்தப்படுவது பல்வேறு முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் வழிவகுக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட மற்றொரு சுட்டுரை..

தற்போது டொனால்ட் டிரம்பின் பதிவுகளுக்கு சமூக வலைத்தளத்தில் பொதுமக்கள் தங்களது சொந்தக் கருத்தைப் பதிவு செய்து மறுப்பதிவு செய்ய முடியும். ஆனால் விருப்பம் தெரிவிக்கவோ, பதில் அளிக்கவோ, கருத்தளிக்காமல் மறுப்பதிவு செய்யவோ முடியாது.

டிவிட்டரின் இந்த நடவடிக்கையை அடுத்து சில மணி நேரங்களில், சமூக வலைத்தளங்களை வரைமுறைப்படுத்தும் புதிய சட்ட மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், தனது சுட்டுரைப் பதிவுகளை தவறானவை என்று பதிவிட்ட சுட்டுரை நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாகவும், சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விளம்பரச் செலவைக் குறைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com