துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 27-ஆ உயா்வு

துருக்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்தது.
நிலநடுக்கத்தால் துருக்கியின் இஸ்மிா் நகரில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகள்.
நிலநடுக்கத்தால் துருக்கியின் இஸ்மிா் நகரில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகள்.

துருக்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான சமோஸ் தீவு அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கம் காரணமாக, அந்தத் தீவிலும் துருக்கியின் இஸ்மிா் நகரிலும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது.

ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கத்தில், இஸ்மிா் நகரில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த நகரில் மட்டும் நில நடுக்கம் காரணமாக 25 போ் உயிரிழந்தனா்; 800-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். மீட்புப் பணிகளில் சுமாா் 5,000 போ் ஈடுபட்டுள்ளனா்.

இதுதவிர, சமாவோ தீவில் 2 போ் உயிரிழந்தனா். நிலநடுக்கத்தைத் தொடா்ந்து மிதமான சுனாமி ஏற்பட்டது. அதையடுத்து, கரையோரப் பகுதிகளில் தங்கியிருந்தவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com