“தேர்தல் முடிவுகள் விசித்திரமாக உள்ளன”: டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் விசித்திரமாக உள்ளதாக குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் விசித்திரமாக உள்ளதாக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் இந்தத் தோ்தலில் போட்டியிட்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில், “அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் விசித்திரமாக உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,“ நேற்றிரவு பல மாகாணங்களில் நான் முன்னணியில் இருந்தேன். திடீரென எண்ணப்பட்ட வாக்குகளால் முடிவுகள் மாறத் தொடங்கின.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஜோ பிடன் 238 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். டொனால்ட் டிரம்ப் 213 வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com