4 ஆண்டுகளுக்கு முந்தைய கருத்தை மீண்டும் பதிவிட்ட ஹிலாரி கிளிண்டன்

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றப் பிறகு பதிவிட்ட சுட்டுரையை நான்கு ஆண்டுகள் கழித்து ஹிலாரி கிளிண்டன் தற்போது மீண்டும் மறுபதிவு செய்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டன்  (கோப்புப்படம்)
ஹிலாரி கிளிண்டன் (கோப்புப்படம்)

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றப் பிறகு பதிவிட்ட சுட்டுரையை நான்கு ஆண்டுகள் கழித்து ஹிலாரி கிளிண்டன் தற்போது மீண்டும் மறுபதிவு செய்துள்ளார்.

குடியரசுக் கட்சித் தலைவரான ஹிலாரி கிளிண்டன் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியைத் தழுவினார்.

இதனையடுத்து சுட்டுரையில் அவர் பதிவிட்டிருந்த கருத்தை தற்போது மீண்டும் மறு பதிவு செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது, ''நம்பிக்கையை இழக்காதீர்கள். வேதம் நமக்கு சொல்கிறது: நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம், ஏனென்றால் சரியான நேரத்தில், நாம் அதன் பலனை அறுவடை செய்வோம்''  என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு சுட்டுரையை மறுபதிவு செய்துள்ள அவர், ''நடப்பதைப் பார்க்கும் அனைவரும் கண்காணித்து வருகிறார்கள். நீங்கள் மதிப்புமிக்கவர், சக்திவாய்ந்தவர், உலகின் ஒவ்வொரு வாய்ப்புக்கும் தகுதியானவர் என்பதில் ஒருபோதும் சந்தேகமில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com