வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்வேன்: டிரம்ப்

குளறுபடி நடப்பதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்வேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
டிரம்ப்
டிரம்ப்

குளறுபடி நடப்பதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்வேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, யில், ஜோ பிடன் 237 வாக்குகளும், டிரம்ப் 213 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், 'இது முக்கியமான தருணம். மிகப்பெரிய வெற்றியை கொண்டாட அனைவரும் தயாராக இருங்கள். என் குடும்பத்தினருக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்று இரவுக்குள் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகிவிடும். மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். 

டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் மட்டுமின்றி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். ஜார்ஜியா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெறுவோம். 

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியினர் மோசடி செய்கின்றனர். சட்டத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றம் செல்வேன். வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட வேண்டும்' என்று பேசியுள்ளார். 

முன்னதாக, தபால் வாக்கு எண்ணிக்கையில் பிடன் முன்னிலை பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com