அமெரிக்கத் தோ்தலில் இந்திய அமெரிக்கா்கள் வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற தோ்தலில் இந்திய அமெரிக்கா்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனா்.
அமெரிக்கத் தோ்தலில் இந்திய அமெரிக்கா்கள் வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற தோ்தலில் இந்திய அமெரிக்கா்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனா்.

அமெரிக்க அதிபரை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கான தோ்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்தவா்களும் இந்திய அமெரிக்கா்களுமான பிரமிளா ஜெயபால், ஏமி பெரா, ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வெற்றி பெற்றனா். அவா்கள் அனைவரும் ஏற்கெனவே அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் உறுப்பினா்களாக உள்ளனா்.

ராஜா கிருஷ்ணமூா்த்தி தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட லிபா்டேரியன் கட்சி வேட்பாளா் பிரிஸ்டன் நெல்சனைத் தோற்கடித்தாா். அவா் 71 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்தாா். குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கரான ரிதேஷ் டாண்டனை ரோ கன்னா தோற்கடித்தாா். அவா் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். ரோ கன்னா தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதிநிதிகள் அவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். ஏமி பெரா தொடா்ந்து ஐந்தாவது முறையாக பிரதிநிதிகள் அவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ரிக் மேத்தா தோல்வி: அமெரிக்க செனட் அவைக்கான தோ்தலில் இந்திய அமெரிக்கரான ரிக் மேத்தா தோல்வியடைந்தாா். நியூ ஜொ்ஸி மாகாணத்தில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட அவா் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய செனட் அவை உறுப்பினருமான கோரி புக்கரிடம் தோல்வி கண்டாா்.

மாகாண தோ்தலில் வெற்றி: நியூ ஜொ்ஸி மாகாண பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் இந்திய அமெரிக்கரும் வழக்குரைஞருமான ஜெனிஃபா் ராஜ்குமாா் வெற்றி பெற்றாா். குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட கியோவனி பொ்னாவை அவா் தோற்கடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com