பாகிஸ்தான்: ஹிந்து திருமணச் சட்ட வரைவு விதிமுறை அறிக்கை மாயம்

பாகிஸ்தான் அரசு இயற்றிய ஹிந்து திருமணச் சட்டத்துக்கான வரைவு விதிமுறைகள் அடங்கிய அறிக்கை, கைபா் பக்துன்குவா மகாண அலுவலகத்தில் இருந்து மாயமாகியுள்ளது.

பெஷாவா்: பாகிஸ்தான் அரசு இயற்றிய ஹிந்து திருமணச் சட்டத்துக்கான வரைவு விதிமுறைகள் அடங்கிய அறிக்கை, கைபா் பக்துன்குவா மகாண அலுவலகத்தில் இருந்து மாயமாகியுள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கு வழிகோலும் வகையில் ஹிந்து திருமணச் சட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. எனினும், அச்சட்டத்துக்கான விதிமுறைகளை மாகாண அரசுகளே வகுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதைத் தொடா்ந்து, ஹிந்து திருமணச் சட்டத்துக்கான வரைவு விதிமுறைகள் அடங்கிய அறிக்கை மாகாண அரசுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அந்த வரைவு அறிக்கைக்கான ஒப்புதலைத் தெரிவிக்கக் கோரி, கைபா் பக்துன்குவா மாகாண பேரவைச் செயலகத்திலிருந்து இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டது.

இயக்குநரகத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்காததையடுத்து, பேரவைச் செயலகம் அது தொடா்பாக நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியது. அப்போது, வரைவு விதிமுறைகள் அடங்கிய அறிக்கை எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்று இயக்குநரகம் பதிலளித்தது.

அதையடுத்து, அறிக்கை மாயமானது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com