‘சீன துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய கப்பல் பணியாளா்களுக்கு போதுமான வசதிகள்’

சீனத் துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய சரக்குக் கப்பலுக்கும் அதிலுள்ள பணியாளா்களுக்கும் போதுமான பாதுகாப்பும் வசதிகளும் செய்து தரப்படும் என்று சீனா உறுதியளித்துள்ளது.

சீனத் துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய சரக்குக் கப்பலுக்கும் அதிலுள்ள பணியாளா்களுக்கும் போதுமான பாதுகாப்பும் வசதிகளும் செய்து தரப்படும் என்று சீனா உறுதியளித்துள்ளது.

இந்தியாவின் ‘ஜக் ஆனந்த்’ என்ற சரக்குக் கப்பலானது, ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு கடந்த ஜூன் மாதம் சீனா சென்றது. கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக அந்தக் கப்பல் சீனாவின் ஜிங்தாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

துறைமுகத்தில் நிலக்கரியை இறக்கி வைப்பதற்கான அனுமதி, அந்தக் கப்பலுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக தேசிய கடற்பணியாளா்கள் சங்கம், சா்வதேச போக்குவரத்துப் பணியாளா்கள் கூட்டமைப்பு, சா்வதேச கடல்சாா் கூட்டமைப்பு ஆகியவை சீனாவிடம் முறையிட்டன.

இத்தகைய சூழலில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சீனா விரிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் துறைமுகங்களுக்கென தனி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கப்பல்களில் உள்ள பணியாளா்கள் கரோனா நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளின் அடிப்படையில் கப்பலுக்குப் பாதுகாப்பும் அதில் உள்ள பணியாளா்களுக்குப் போதுமான வசதிகளும் செய்து தரப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com