ஜோ பைடனுக்கு ஒத்துழைக்க மறுக்கும் டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஒத்துழைக்க டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் குடியரசுக் கட்சியின் டிரம்பை வென்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தோல்வியை தொடக்கம் முதலே மறுத்து வந்த டிரம்ப் பைடனின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் அதிபராகப் பதவியேற்க முடியும் என்பதால் டிரம்ப் தலைமையிலான நிர்வாகமே தற்போது அதிகாரத்தில் உள்ளது. எனினும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபருக்கு நிர்வாக ஒத்துழைப்பு வழங்க வேண்டிய டிரம்ப் பைடனுக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு தலைவர்களின் தகவல்கள், உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள வேண்டிய பைடனுக்கு அத்தகையத் தகவல்கள் கிடைக்கச் செய்வதில் டிரம்ப் தொடர்ந்து முட்டுக்கட்டையாக செயல்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com