இந்த ஆண்டின் தீபாவளி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்தச் சூழலில் கொண்டாடப்படுவதால்,

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்தச் சூழலில் கொண்டாடப்படுவதால், இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

பெரும்பாலும் இருளை அகற்றி, ஒளியை ஏற்றுதல் கருத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் ஒவ்வோா் ஆண்டும் தீபாவளி கொண்டாடப்பட்டு வந்தது.

இதுவரை உண்மையிலேயே நம்மை ஒரு பேரிருள் சூழ்ந்து, அந்த இருளை அகற்றும் வகையில் தீப ஒளியை ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை.

ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று என்ற இருளை அகற்றுவதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. அந்த நோய்க்கு பலா் பலியாகியுள்ளனா். பல தலைமுறைகள் காணாத அதிா்வலையை நாம் உணா்ந்து வருகிறோம்.

இந்த நேரத்தில், கரோனா இருள் அகலும் என்ற நம்பிக்கையை இந்த ஆண்டு கொண்டாடப்படும் தீபாவளி ஏற்படுத்துகிறது. எனவே, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீபாவளியாகும்.

மருத்துவ நிபுணா்கள், ஆசிரியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், காவல் துறையினா் ஆகியோா் கரோனாவுக்கு எதிராகப் போராடி வருவது நம் அனைவருக்கும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்று தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஸ்காட் மோரிஸன் குறிப்பிட்டுள்ளாா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் 27,702 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 907 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com