
பெருவின் இடைக்கால அதிபர மானுவல் மெரீனோ பதவி விலக வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தல் 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அரசுக்கு மேலும் அதிகரித்து வருகிறது.
நிரூபிக்கப்படாத ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிபா் மாா்ட்டின் விஸ்காராவை நாடாளுமன்றம் கடந்த 10-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்தது. பல ஆண்டுகளுக்கு முன்னா் மாக்கீகா மாகாண ஆளுநராக அவா் இருந்தபோது லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. விஸ்காரா நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதிகம் அறியப்படாத மானுவல் மெரீனோ இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தே ஆயிரக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.