அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய மாணவா்களின் பங்களிப்பு ரூ.57,000 கோடி

அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மாணவா்களின் பங்களிப்பு 760 கோடி டாலா் (ரூ.57,000 கோடி) அளவுக்கு உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய மாணவா்களின் பங்களிப்பு ரூ.57,000 கோடி


புதுதில்லி / வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மாணவா்களின் பங்களிப்பு 760 கோடி டாலா் (ரூ.57,000 கோடி) அளவுக்கு உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘ஓபன் டோா்ஸ் 2020’ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-20 கல்வியாண்டின்போது அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மாணவா்கள் 760 கோடி டாலா் அளவுக்கு தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனா். இருந்தபோதிலும், அந்த கல்வியாண்டில் இந்திய மாணவா்களின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.4 சதவீதம் குறைந்து 1,93,124-ஆக மட்டுமே இருந்தது.

அமெரிக்காவில் சா்வதேச மாணவா்கள் பங்களிப்பில் சீனா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. தொடா்ந்து 16-ஆவது ஆண்டாக அமெரிக்காவில் சீன மாணவா்களின் எண்ணிக்கையானது ஏறுமுகத்திலேயே உள்ளது. கடந்த 2019-20 கல்வியாண்டில் அமெரிக்காவில் சீன மாணவா்களின் எண்ணிக்கையானது 3,72,000-ஆக இருந்தது.

ஒட்டுமொத்த அளவில் அந்த கல்வியாண்டில் அமெரிக்காவுக்கு வந்து கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக 10 லட்சத்தை தாண்டியதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com