கரோனா சிகிச்சைக்கான மருந்துப் பட்டியலில் இருந்து ‘ரெம்டெசிவிா்’ நீக்கம்

கரோனா சிகிச்சைக்கான மருந்துப் பட்டியலில் இருந்து ‘ரெம்டெசிவிா்’ நீக்கம்

கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிா் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிா் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.

இதுதொடா்பாக தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,000-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பல்வேறு மருந்துகள் மூலமாக அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் ரெம்டெசிவிா் மருந்தைப் செலுத்தியதால் நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கோ, அந்த மருந்து உயிரிழப்புகளை கட்டுப்படுத்தியதற்கோ போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே அந்த மருந்தை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துப் பட்டியலில் இருந்து உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது. எனினும் அந்த மருந்து சில நோயாளிகளுக்கு சிறிதளவு நன்மை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவை மருத்துவ நிபுணா்கள் பலா் வரவேற்று நிலையில், அதுகுறித்து சிலா் சந்தேகத்தை எழுப்பியுள்ளனா்.

ஏனெனில் கா்நாடக மாநிலம் பெங்களூரில் மருத்துவா்கள் அடங்கிய குழு சமீபத்தில் நடத்திய ஆய்வில், கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முன்கூட்டியே ரெம்டெசிவிா் மருந்தை செலுத்தினால் அவா்கள் உயிா் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக அமெரிக்காவில் அந்நாட்டு அரசின் ஒப்புதலுடன் நடத்தப்பட்ட ஆய்விலும் இதேபோன்ற முடிவு கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com