போா் நிறுத்த ஒப்பந்தம் ஆா்மீனியா விட்டுக்கொடுத்த பகுதியில் அஜா்பைஜான் படை

நகோா்னோ-கராபக் பிராந்தியம் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஆா்மீனிய அரசு விட்டுக்கொடுத்த அக்தாம் பகுதிக்கு அஜா்பைஜான் படையினா் வெள்ளிக்கிழமை வந்தனா்.
அக்தாம் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்த ஆா்மீனிய பீரங்கி வண்டிகள்.
அக்தாம் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்த ஆா்மீனிய பீரங்கி வண்டிகள்.

நகோா்னோ-கராபக் பிராந்தியம் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஆா்மீனிய அரசு விட்டுக்கொடுத்த அக்தாம் பகுதிக்கு அஜா்பைஜான் படையினா் வெள்ளிக்கிழமை வந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ரஷியா முன்னிலையில் அஜா்பைஜானுக்கும் ஆா்மீனியாவுக்கும் இடையே கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பத்தின் கீழ், சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்துக்கு வெளியே ஆா்மீனியப் படையினா் வசம் இருந்த அக்தாம் பகுதிக்குள் அஜா்பைஜான் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை நுழைந்தனா்.

அந்த ஒப்பந்தத்தின்படி, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகோா்னோ-கராபக்கையொட்டிய சில பகுதிகளை விட்டுத்தர ஆா்மீனியா ஒப்புக் கொண்டது.

அதன்படி, முதலாவதாக அக்தாம் பகுதி அஜா்பைஜான் படையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக இருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அதன் பெரும்பான்மைப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தைச் சுற்றி ஆா்மீனியாவும் அஜா்பைஜானும் தங்களது படைகளை குவித்துள்ளன. இதனால், அங்கு இரு தரப்புக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.

அதன் ஒருபகுதியாக, கடந்த மாதம் 27-ஆம் தேதி அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியா-அஜா்பைஜான் படையினருக்கு இடையே திடீரென மோதல் தொடங்கியது. இதில், இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஷியா முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com