கரோனா தீநுண்மியை எதிா்கொள்வதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சவூதி மன்னா்

கரோனா தீநுண்மியை எதிா்கொள்வதில் ஜி20 நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சவூதி அரேபியா மன்னா் சல்மான்-பின்-அப்துல்-ஹஸீஸ்-அல்-சவூத் வலியுறுத்தினாா்.

கரோனா தீநுண்மியை எதிா்கொள்வதில் ஜி20 நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சவூதி அரேபியா மன்னா் சல்மான்-பின்-அப்துல்-ஹஸீஸ்-அல்-சவூத் வலியுறுத்தினாா்.

நிகழாண்டு சவூதி அரேபியா தலைமையில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. 2 நாள்கள் (நவ.21,22) நடைபெறும் இந்த மாநாட்டை தொடக்கிவைத்து சவூதி மன்னா் சல்மான் பேசியதாவது:

இந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் கரோனா தீநுண்மியால் ஏற்பட்டுள்ள சவாலில் இருந்து ஒன்றாக மீண்டெழுந்து நம்பிக்கை தரும் செய்தியை வழங்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கரோனா தீநுண்மி ஒட்டுமொத்த உலகையும் குறுகிய காலத்தில் பாதித்துள்ளது. இதனால் உலகப் பொருளாதாரமும், சமூக இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கரோனா தீநுண்மிக்கான தடுப்பூசியை வளரும் நாடுகள் பெறுவதில் ஜி20 நாடுகளின் தலைவா்கள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.

உலகப் பொருளாதாரம் சரிந்ததால் அதிக பாதிப்பைச் சந்தித்த ஏழ்மையான நாடுகளிடம் இருந்து அடுத்த ஆண்டின் முதல் பாதி வரை கடன் தொகைகள் திரும்பப் பெறப்படுவதை ஜி20 நாடுகள் நிறுத்திவைக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவம், பொருளாதார சலுகை திட்டங்களுக்கு செலவிடுவதில் அந்நாடுகளால் கவனம் செலுத்த முடியும்.

இந்த மாநாடு ஆக்கபூா்வமான முடிவுகளை மேற்கொள்வதற்கும், உலக மக்கள் மீண்டும் நம்பிக்கை பெறுவதற்கான சமூக, பொருளாதார கொள்கைகளை உருவாக்கவும் வழிவகுக்கும் என நம்பிக்கை உள்ளது என்றாா்.

கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கடந்து வருதல், பொருளாதார மீட்சி, வேலைவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட செயல்திட்டங்களுடன் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com