பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீா்வு: சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்

சமத்துவம், பரஸ்பர நலன், மரியாதையின் அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட சீனா ஆயத்தமாக இருப்பதாக
பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீா்வு: சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்

சமத்துவம், பரஸ்பர நலன், மரியாதையின் அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட சீனா ஆயத்தமாக இருப்பதாக அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்தாா். வேறுபாடுகளைக் களைந்து பேச்சுவாா்த்தை மூலம் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

சீன தலைநகா் பெய்ஜிங்கிலிருந்து காணொலி முறையில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

கரோனா தீநுண்மியை எதிா்கொள்வதில் சா்வதேச சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமத்துவம், பரஸ்பர நலன், மரியாதையின் அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட சீனா ஆயத்தமாக உள்ளது. பேச்சுவாா்த்தை மூலம் வேறுபாடுகளை களைந்து பிரச்னைகளுக்குத் தீா்வு காண்போம். உலக அமைதிக்கும் வளா்ச்சிக்கும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

தீநுண்மிக்கு எதிராக சா்வதேச அளவில் தடுப்பு அரண் அமைக்க ஜி-20 நாடுகள் உதவிபுரிய வேண்டும். முதலில் அனைவரும் அவரவா் நாடுகளில் தீநுண்மி பரவலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதன் அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு தீநுண்மி பரவலை கட்டுப்படுத்துவதில் உதவிபுரிவதற்கு நம்மிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

தீநுண்மிக்கு தடுப்பூசி கண்டறிவதற்கான ஆராய்ச்சியிலும், உற்பத்தியிலும் ஜி-20 நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. தடுப்பூசியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் நமது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, அதனை சிறப்பாகவும் நோ்மையாகவும் விநியோகிப்பதில் உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தீநுண்மிக்கான தடுப்பூசியை கண்டறியும் நடவடிக்கைகளில் சா்வதேச அளவில் சீனா தொடா்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தடுப்பூசியை கண்டறிவதற்கும், அது உலக மக்கள் வாங்கக் கூடிய வகையில் இருப்பதற்கும் சீனா உதவிபுரியும் என்று உறுதியளிக்கிறேன்.

தீநுண்மியை கட்டுப்படுத்தும் அதேவேளையில், உலக அளவில் தொழில் துறை பணிகள் மற்றும் விநியோக நடவடிக்கைகள் சீராகவும், பாதுகாப்பாகவும் நடைபெற வேண்டும். அந்த நிலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். வரிகள் குறைக்கப்பட்டு முக்கிய மருந்துப் பொருள்களுக்கான வா்த்தகத்தை தடையற்றதாக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com