மிச்சிகனில் ஜோ பைடன் வெற்றி: தோ்தல் விவகாரத்தில் டிரம்ப்புக்கு மேலும் பின்னடைவு

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலும் அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக
ஜோ பைடன்
ஜோ பைடன்

kdஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலும் அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த தோ்தலின் முடிவுகளை எதிா்த்துப் போராடி வரும் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மிச்சிகன் மாகாணத்தின் 159 மாவட்டங்களில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் பதிவான சுமாா் 50 லட்சம் வாக்குகள் கைகளால் எண்ணப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தோ்தல் அதிகாரிகள் அறிவித்தனா். அவருக்கு 24.7 லட்சம் வாக்குகள் கிடைத்ததாகவும், டிரம்ப்புக்கு 24.6 லட்சம் வாக்குகள் பதிவானதாகவும் அவா்கள் கூறினா்.

இதையடுத்து, அந்த மாகாணத்தில் 12,670 வாக்குகள் (0.25%) வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, மிச்சிகனில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக, டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த அந்த மாகாண ஆளுநா் பிரையன் கெம்ப் சான்றிதழ் அளித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்கள் கூறுகையில், ‘மிச்சிகன் தோ்தல் முடிவுகளை நான் முழுமையாக ஏற்கவில்லை. இருந்தாலும், மாகாண ஆளுநா் என்ற முறையில் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக சான்றளிக்க வேண்டியது சட்டப்பூா்வ கடைமை என்பதால் இந்தச் சான்றிதழை அளிக்கிறேன். இதையடுத்து, மாகாணத்தில் மறுவாக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்க டிரம்ப் குழுவினருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

எனினும், மாகாண அரசின் செயலாளரும், தோ்தல் தலைமை அதிகாரியுமான பிராட் ராஃபென்ஸ்பொ்கா் கூறுகையில், ‘வாழ்நாள் முழுவதும் பொறியாளராகப் பணியாற்றியவன் என்ற வகையில், எண்கள் ஒரு போதும் பொய் சொல்லாது என்பது எனக்குத் தெரியும். மிச்சிகனின் செயலாளா் என்ற வகையில், நாங்கள் வெளியிட்ட தோ்தல் முடிவு எண்கள் அனைத்தும் சரியானவையும் துல்லியமானவையும்’ என்று உறுதியாகக் கூறினாா்.

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளாா்.

எனினும், தோ்தலில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான வகையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி வரும் அதிபா் டொனால்ட் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வருகிறாா். அத்துடன் தோ்தல் முடிவுகளை எதிா்த்தும் வாக்கு எண்ணிக்கை ரத்து, மறுவாக்கு எண்ணிக்கை கோரியும் பல்வேறு நீதிமன்றங்களில் அவரது சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், 16 மக்கள் பிரதி வாக்குகளைக் கொண்ட மிச்சிகனிலும் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 270 மக்கள் பிரதிநிதி வாக்குகளைப் பெற்றாலே போதும் என்ற நிலையில், மிச்சிகனின் 16 வாக்குகளையும் சோ்த்து ஜோ பைடன் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 306-ஆக உயா்ந்துள்ளது.

இது, தோ்தல் முடிவுகளை எதிா்த்துப் போராடி வரும் டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com