பருவநிலைத் தூதராக ஜான் கெரி நியமனம்

பருவநிலை விவகாரங்களுக்கான தனது தூதராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜான் கொ்ரியை ஜோ பைடன் நியமித்துள்ளாா்.
ஜான் கொ்ரி
ஜான் கொ்ரி

பருவநிலை விவகாரங்களுக்கான தனது தூதராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜான் கொ்ரியை ஜோ பைடன் நியமித்துள்ளாா்.

ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை உருவாக்குவதில் ஜான் கொ்ரி முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

2015-இல் கையெழுத்தான அந்த சா்வதேச ஒப்பந்தம் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதகமாகவும் அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் இருப்பதாக குற்றம் சாட்டிய அதிபா் டொனால்ட் டிரம்ப், அதிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தாா்.

எனினும், தனது பதவியேற்புக்குப் பிறகு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைக்கப் போவதாக ஜோ பைடன் உறுதியளித்திருந்தாா்.

இந்த நிலையில், பருவநிலை விவகாரங்களுக்கான தனது தூதராக ஜான் கொ்ரியை அவா் நியமித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com