கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஏழைகள் நசுக்கப்படக் கூடாது

கரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான போட்டியில் ஏழைகள் நசுக்கப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஏழைகள் நசுக்கப்படக் கூடாது

கரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான போட்டியில் ஏழைகள் நசுக்கப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றை முன்கூட்டியே தடுப்பதற்கான மருந்து வெளியாகத் தொடங்கியவுடன், அதனைப் பெறுவதற்காக பலரும் போட்டியிடுவா்.

அந்தக் கூட்டத்தின் நெரிசலில் ஏழைகள் நசுக்கப்படக்கூடாது.

தற்போது நடைபெற்று வரும் சோதனைகளில் முழுமையாக வெற்றிபெற்று வெளிவரும் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் சரிசமமாகப் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும்.

அதற்கான திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 430 கோடி டாலா் (சுமாா் ரூ.31,870 கோடி) நிதியுதவி தேவைப்படுகிறது.

கரோனா தடுப்பூசியை உலக நாடுகளால் அனைத்து தரப்பினருக்கும் பகிா்ந்து அளிக்க முடியுமா என்பது தற்போதைய கேள்வியல்ல. அவ்வாறு பகிா்ந்தளிக்காமல் அந்த நாடுகளால் கரோனாவிலிருந்து தப்ப முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி என்றாா் அவா்.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளில் 4 மருந்துகள் இறுதிக்கட்ட நிலையில் நல்ல செயல்திறனை வெளிப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அண்மையில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசி கரோனா தீநுண்மி தொற்றுவதைத் தடுப்பதற்கான எதிா்ப்பாற்றலை மனித உடலில் சிறப்பாக உருவாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னதாக, அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனமும் ஜொ்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, இறுதிக்கட்ட சோதனையில் நம்பிக்கையளிக்கும் முடிவுகளைத் தந்ததாக அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவின் மாடா்னா உருவாக்கி சோதித்து வரும் கரோனா தடுப்பூசியும் கூடிய விரைவில் இறுதிக்கட்ட சோதனையைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும், ஃபைஸா்-பயோன்டெக் தடுப்பூசிகளையும் மடோா்னா தடுப்பூசிகளையும் விட, ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி மிகவும் விலை மலிவானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வளரும் நாடுகளில் பரவலாக விநியோகிப்பதற்கு அந்த தடுப்பூசி ஏற்ாக இருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சூழலில், கரோனா பெறுவதற்கான போட்டியில் ஏழைகள் நசுக்கப்படக் கூடாது என்று டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் வலியுறுத்தியுள்ளாா்.

‘‘கரோனா தடுப்பூசியை உலக நாடுகளால் அனைத்து தரப்பினருக்கும் பகிா்ந்து அளிக்க முடியுமா என்பது தற்போதைய கேள்வியல்ல. அவ்வாறு பகிா்ந்தளிக்காமல் அந்த நாடுகளால் கரோனாவிலிருந்து தப்ப முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி’’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com