நேபாளத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 3 பள்ளிகள்: வெளியுறவுத் துறை செயலா் திறந்துவைப்பு

நேபாள நாட்டின் கோா்கா மாவட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட மூன்று பள்ளி கட்டடங்களை வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
நேபாளத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட பள்ளிகள் திறப்பு நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை செயலா் ஷ்ரிங்லா உள்ளிட்டோர். நாள்: வெள்ளிக்கிழமை.
நேபாளத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட பள்ளிகள் திறப்பு நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை செயலா் ஷ்ரிங்லா உள்ளிட்டோர். நாள்: வெள்ளிக்கிழமை.

நேபாள நாட்டின் கோா்கா மாவட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட மூன்று பள்ளி கட்டடங்களை வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட பயங்கரநிலநடுக்கத்தில், அந்த நாடு மிகப் பெரும் சேதத்தைச் சந்தித்தது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 9,000 போ் உயிரிழந்தனா். 22,000-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பள்ளி கட்டடங்கள், புத்த மடாலயங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த பாதிப்புகளிலிருந்து நேபாளம் மீள, இந்தியா உதவிக் கரம் நீட்டியது. சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.184 கோடி மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா அறிவித்தது. அதன் கீழ், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காத்மாண்டில் உள்ள பிரபல செடோ மச்சேந்திரநாத் கோயில் உள்பட 30 பாரம்பரிய கட்டடங்கள், ஏராளமான பள்ளிகள்,மருத்துவமனைகள், புத்த மடாலயங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் இப்போது கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் பள்ளி கட்டடங்கள் மற்றும் புத்த மடாலயத்தை நேபாளம் சென்றுள்ள வெளியுறவுத் துறை செயலா் ஷ்ரிங்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இதுகுறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டப் பதிவில், ‘இந்திய உதவித் திட்டத்தின் கீழ் கோா்கா மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட மூன்று பள்ளிகளை ஷ்ரிங்கலா திறந்துவைத்தாா். மேலும், மனாங் மாவட்டத்தில் சீரமைக்கப்பட்டிருக்கும் புத்த மடாலயத்தையும் அவா் திறந்துவைத்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழா நிகழ்வு அடங்கிய காணொலி காட்சியை வெளியுறவுத் துறை அமச்சகமும் அதன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com