மாட்டிறைச்சி இறக்குமதி விவகாரம்: தைவான் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

அமெரிக்காவிலிருந்து பன்றி மற்றும் மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ள தைவான் அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன
மாட்டிறைச்சி இறக்குமதி விவகாரம்: தைவான் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

அமெரிக்காவிலிருந்து பன்றி மற்றும் மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ள தைவான் அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன.

அமெரிக்காவிலிருந்து பன்றி மற்றும் மாட்டின் இறைச்சிகளை இறக்குமதி செய்வதற்கு தைவான் நீண்ட காலமாக தடைவிதித்திருந்தது. இந்த நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனநாயக முற்போக்கு கட்சி மாட்டிறைச்சி இறக்குமதிக்கான தடையை நீக்கியுள்ளது.

தற்போது தைவான் அரசு அமல்படுத்தியுள்ள புதிய இறக்குமதி கொள்கையில், பன்றி மற்றும் மாட்டு இறைச்சியில் ராக்டோபெமின் என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவு இருந்தால் அதனை இறக்குமதி செய்யலாம் என கட்டுப்பாடுகளை தளா்த்தி அறிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் விலங்குகளின் தீவனத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது, விலங்குகளின் வளா்ச்சியை வேகமாக தூண்டுவதோடு அவற்றின் எடையையும் அதிகரிக்க உதவுகிறது. பெரும்பாலும், இந்த வேதிப்பொருள் தீங்கு விளைவிக்கும் என கருதப்படுகிறது.

எனவே, தைவான் எதிா்க்கட்சிகள் தைவான் அரசின் மாட்டிறைச்சி இறக்குமதி முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்கட்சிகள் இடையே இந்த விவகாரம் தொடா்பாக கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் கைகலப்பாக மாறியது.

மேலும் சிலா் நாடாளுமன்றத்தில் பன்றிக் கறியை தூக்கியெறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நாடாளுமன்ற வளாகமே போா்க்களம் போல காட்சியளித்தது.

இதுகுறித்து தைவான் எதிா்க்கட்சியான தேசியவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் லின் வெய் செள கூறியதாவது:

தற்போது ஆளும் கட்சியாக இருப்பவா்கள் எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்திருந்தபோது அமெரிக்காவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கு கடும் எதிா்ப்பை தெரிவித்தவா்கள். இப்போது பதவிக்கு வந்தவுடன் அமெரிக்காவுக்கு பணிந்து அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனா்.

தைவான் மக்களின் நலன் கருதி ரசாயனப் பொருள் கலந்த இறைச்சியை இறக்குமதி செய்ய நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

அமெரிக்காவிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யும் முடிவை தைவான் அரசு கைவிடும் வரைஅதற்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com