ஹாங்காங்: 60 போராட்டக்காரா்கள் கைது

ஹாங்காங்கில் சீன தேசிய தினத்தையொட்டி அனுமதியில்லாமல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஹாங்காங்: 60 போராட்டக்காரா்கள் கைது


ஹாங்காங்: ஹாங்காங்கில் சீன தேசிய தினத்தையொட்டி அனுமதியில்லாமல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்டதன் ஆண்டு தினம், அந்த நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தேசிய தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்துவோா், சீன தேசி தினத்தன்று போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டும் அத்தகைய போராட்டங்களுக்கு இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, ஹாங்காங்கில் காஸ்வே பே பகுதிகில் பலா் கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஹாங்காங் அரசால் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத கோஷங்களை அவா்கள் எழுப்பினா்.

போராட்டங்களை ஒடுக்குவதற்காக நகரம் முழுவதும் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். அதனையும் மீறி ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சுமாா் 60 போ் கைது செய்யப்பட்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com