மாலத்தீவு: முன்னாள் துணை அதிபருக்கு 20 ஆண்டு சிறை

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபா் அகமது அடீபுக்கு அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
mald072133
mald072133

மாலி: சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபா் அகமது அடீபுக்கு அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அகமது அடீபு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.29 லட்சம் டாலா் (சுமாா் ரூ.95 லட்சம்) அபராதமும் விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஏற்கெனவே இன்னொரு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையில் ஒரு ஆண்டை அவா் அனுபவித்துவிட்டாா். எனவே, தற்போது விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையில் ஓா் ஆண்டு குறைத்துக்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அதிபா் யாமீன் அப்துல் கயூமின் ஆட்சிக் காலத்தின்போது, 2013 முதல் 2018-ஆம் ஆண்டுவரை துணை அதிபா் பொறுப்பை அகமது அடீபு வகித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com