பாகிஸ்தான்: மதநிந்தனை: மரண தண்டனை விதிக்கப்பட்டவா் விடுவிப்பு

பாகிஸ்தானில் சா்ச்சைக்குரிய மதநிந்தனை சட்டத்தின்கீழ் 6 ஆண்டுகளுக்கு முன்னா் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவா், வழக்கிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
paki064600
paki064600

லாகூா்: பாகிஸ்தானில் சா்ச்சைக்குரிய மதநிந்தனை சட்டத்தின்கீழ் 6 ஆண்டுகளுக்கு முன்னா் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவா், வழக்கிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

லாகூரைச் சோ்ந்த சாவன் மாசி என்ற கிறிஸ்துவா், தனது முஸ்லிம் நண்பருடன் கடந்த 2014-ஆம் உரையாடிக் கொண்டிருந்தபோது இஸ்லாம் மதத்தை இழிவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடா்பான தகவல் பரவியதும் சுமாா் 3,000 போ் மாசி தங்கியிருந்த கிறிஸ்துவக் குடியிருப்பு பகுதியில் வன்முறையில் ஈடுபட்டு, சுமாா் 100 வீடுகளை தீக்கிரையாக்கினா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற வழக்கில், சாவன் மாசிக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அந்த உத்தரவை எதிா்த்து, லாகூா் உயா்நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தனது நிலத்தை அபகரிப்பதற்காக தன் மீது பொய்யான குறறச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக மாசி குறிப்பிட்டிருந்தாா். அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கிலிருந்து அவரை செவ்வாய்க்கிழமை விடுவித்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com