பொதுமக்கள் தொடர் போராட்டம்: பதவி விலகினார் கிர்கிஸ்தான் அதிபர்!

வாரக்கணக்கில் நீடித்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவ் வியாழனன்று பதவி விலகினார்,
வாரக்கணக்கில் நீடித்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவ் வியாழனன்று பதவி விலகினார்,
வாரக்கணக்கில் நீடித்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவ் வியாழனன்று பதவி விலகினார்,

பிஷ்கெக்: வாரக்கணக்கில் நீடித்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவ் வியாழனன்று பதவி விலகினார்,

1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் என்னும் கட்டமைப்பு துண்டுகளாக சிதறுண்டபோது அதிலிருந்து பிரிந்து உருவான சிறிய நாடு கிர்கிஸ்தான். இந்தநாட்டின் ஐந்தாவது அதிபராக கடந்த 24.11.2017 அன்று பதவியேற்றுக் கொண்டவர் சூரோன்பாய் ஜீன்பேகோவ்.

இந்தநாட்டில் கடந்த 04.10.2020 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 16 கட்சிகள் கலந்து கொண்ட இந்தத் தேர்தலில் கட்சிகள் நாடாளுமன்றத்தில் இடம் பெற குறைந்த பட்ச ஒட்டான 7 சதவீத வாக்குகளைப் பெற்றனர். இதையடுத்து மீதமுள்ள கட்சிகள் தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி தொடர் போரட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  இதன்காரணமாக போலீசாருக்கும் கலவரக்காரர்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன.இதையடுத்து தேர்தல்களை ரத்து செய்த அந்த  நாட்டு மத்திய தேர்தல் ஆணையமானது வரும் நவம்பர் மாதம் 6-ஆம் தேதியன்று புதிய தேர்தல்களை நடத்த நாள் குறித்துள்ளது.   

இந்நிலையில் வாரக்கணக்கில் நீடித்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவ் வியாழனன்று பதவி விலகினார்,

இதுதொடர்பாக வியாழனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தனது சொந்த குடிமகன்களின் மீதே தடியடிப் பிரயோகம் நடத்தி, துப்பாக்கிச்  சூடு நடத்திய ஒருவனாக கிர்கிஸ்தான் வரலாற்றில் நினைவுகூறப்பட நான் விரும்பவில்லை. நாட்டு மக்களைக் காக்கவே ராணுவமும் காவல்துறையும் தங்களது கைவசமுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும். எனவே எந்த வித வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று இருதரப்பினையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com