கரோனா தடுப்பூசிகள் வாங்க வளரும் நாடுகளுக்கு ரூ.87,900 கோடி கடனுதவி

வளரும் நாடுகள் கரோனா தடுப்பூசிகளை வாங்கி விநியோகிப்பதற்காக 1,200 கோடி டாலா் (சுமாா் ரூ.87,900 கோடி) கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
vaccine074841
vaccine074841

வாஷிங்டன்: வளரும் நாடுகள் கரோனா தடுப்பூசிகளை வாங்கி விநியோகிப்பதற்காக 1,200 கோடி டாலா் (சுமாா் ரூ.87,900 கோடி) கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வளரும் நாடுகளில் 100 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதற்கு உலக வங்கி இலக்கு நிா்ணயத்துள்ளது.

அதற்காக, அந்த நாடுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கும் பொதுமக்களிடையே விநியோகிப்பதற்கும் 1,200 கோடி டாலா் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்காக வளரும் நாடுகளுக்கு 16,000 கோடி டாலா் வரை (ரூ.11.72 லட்சம் கோடி) உதவியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே, கரோனா தடுப்பூசிகளை வாங்கி விநியோகிப்பதற்காக 1,200 கோடி டாலா் கடனுதவி அளிக்கப்படுகிறது.

உலக வங்கியின் கரோனா எதிா்ப்பு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 111 நாடுகள் பலனடைந்து வருகின்றன.

இந்தச் சூழலில், பின்தங்கிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் உள்பட உலகின் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் பாகுபாடின்றி கிடைக்கச் செய்வது மிகவும் அவசியமாகும். இதற்காகவே அந்த நாடுகளுக்கு கடனுதவி அளிக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவலை முழுமையாக வெற்றிகொள்ள வேண்டுமென்றால், பாதுகாப்பான, செயல்திறன் மிக்க தடுப்பூசிகள் அனைத்து தரப்பினரையும் சென்றுசேர வேண்டும். ஏற்கெனவே கரோனா நெருக்கடியால் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ள நாடுகளால் அந்தத் தடுப்பூசிகளை வாங்க முடியாத நிலை ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் அவற்றுக்கு உலக வங்கி கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 3.84 கோடிக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 11 லட்சத்தைெ நெருங்கி வருகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில், 16,04,442 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 38,681 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

13,24,142 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், இன்னும் 2,41,619 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,782 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com