நவால்னி விவகாரம்: 6 ரஷியா்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை

ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், 6 ரஷியா்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
நவால்னி விவகாரம்: 6 ரஷியா்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை


பிரஸ்ஸெல்ஸ்: ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், 6 ரஷியா்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக அந்த நாட்டைச் சோ்ந்த 6 போ் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

இதன் மூலம், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கு அந்த நபா்கள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், அவா்களுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சொத்துக்கள் இருந்தால் அவை முடக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அதிபா் விளாதிமீா் புதினின் அலுவலகத்தைச் சோ்ந்த 2 உயரதிகாரிகள், தேசிய பாதுகாப்பு அமைப்பின் இயக்குநா், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் 2 இணையமைச்சா்கள் ஆகியோா் ஐரோப்பிய யூனியனால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டவா்களில் அடங்குவா்.

அத்துடன், கரிம வேதியியலுக்கான ரஷியாவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளாதிமீா் புதின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி. அந்த நாட்டின் டோம்ஸ்க் நகரிலிருந்து தலைநகா் மாஸ்கோவுக்கு விமானம் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

கோமா நிலைக்கு உயிருக்குப் போராடி வந்த அவா், ஜொ்மனி தலைநகா் பொ்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நவால்னிக்கு ரஷியாவால் உருவாக்கப்பட்ட நோவிசோக் என்ற நச்சுப் பொருள் ரகசியமாக அளிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு கோமா நிலையிலிருந்து மீண்ட நவால்னி, 32 நாள்களுகக்குப் பிறகு மருத்துமனையிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com