இணையத்தைக் கலக்கும் குழந்தையின் புகைப்படம்

ஐக்கிய அரபு அமீரக மருத்துவர் ஒருவர் பதிவிட்ட புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று தனது முகக்கவசத்தைப் பிடித்து இழுக்கும் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.
இணையத்தில் கொண்டாடப்படும் புகைப்படம்
இணையத்தில் கொண்டாடப்படும் புகைப்படம்

ஐக்கிய அரபு அமீரக மருத்துவர் ஒருவர் பதிவிட்ட புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று தனது முகக்கவசத்தைப் பிடித்து இழுக்கும் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கரோனாவின் தீவிரத்தை உலக நாடுகள் உணர ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் கடந்த மார்ச் மாதம் பேரிடர் அவசர நிலையை அறிவித்தது.

இதனால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளும் தங்களது நாடுகளில் பொதுமுடக்கத்தை அறிவித்தன. மேலும் கரோனா பரவலைத் தவிர்க்க முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது, அடிக்கடி கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்பால் உலகம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவராகப் பணியாற்றும்  சமர் செயிப் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரின் முகக்கவசத்தை பிடித்து இழுத்தபடி இருக்கும் அந்தப் புகைப்படம் நாம் விரைவில் முகக்கவசத்திலிருந்து விடுதலையாகப் போகிறோம் என்பதை உணர்த்துவதாக உள்ளதாக சமர் பதிவிட்டுள்ளது பலரைக் கவர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com