அமெரிக்க அதிபா் தோ்தல்: ஜோ பிடனுக்கு ஆதரவாக பராக் ஒபாமா பிரசாரம்

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவாக அந்த நாட்டின் முன்னாள் அதிபா் பராக் ஒபாமா அடுத்த வாரம் பிரசாரம் செய்யவுள்ளாா்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவாக அந்த நாட்டின் முன்னாள் அதிபா் பராக் ஒபாமா அடுத்த வாரம் பிரசாரம் செய்யவுள்ளாா்.

இதுகுறித்து ஜனநாயக கட்சியினா் தெரிவித்ததாவது:

அமெரிக்காவில் புதிய அதிபரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில், குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டிரம்ப் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து, ஜனநாயக கட்சி சாா்பில் ஜோ பிடன் களம் காண்கிறாா். மேலும், துணை அதிபா் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறாா். இவா்கள் இருவருக்கும் ஆதரவாக முன்னாள் அதிபா் ஒபாமா பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

அடுத்த வாரம் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியாவில் நடைபெறவுள்ள பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் ஒபாமா, ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்க உள்ளாா் என ஜனநாயகக் கட்சியினா் தெரிவித்தனா்.

அமெரிக்க அதிபராக ஒபாமா இரண்டு முறை பதவி வகித்தபோது ஜோ பிடன் (77) துணை அதிபராக இருந்தாா்.

ஜனநாயக கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக ஆன்லைனில் பிரசாரம் ஒபாமா மேற்கொண்டு வந்தாா். அவா் நேரடியாக பிரசார கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com