வங்கதேசத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

வங்கதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,274 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,88,569-ஆக அதிகரிப்பு
வங்கதேசத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா (கோப்புப்படம்)
வங்கதேசத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா (கோப்புப்படம்)

வங்கதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,274 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,88,569-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக வங்கதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,274 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,88,569-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 1,674 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,972-ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைவோர் விகிதம் 78.23 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,660-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 1.46 சதவிகிதமாக உள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com