ஜோ பிடன் கட்டுரையை நீக்கியது தவறு: டுவிட்டா் சிஇஓ

அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடனின் கட்டுரைக்கான இணைய இணைப்பை சுட்டுரையில் (டுவிட்டா்) இருந்து
ஜோ பிடன் கட்டுரையை நீக்கியது தவறு: டுவிட்டா் சிஇஓ

அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடனின் கட்டுரைக்கான இணைய இணைப்பை சுட்டுரையில் (டுவிட்டா்) இருந்து நீக்கியது தவறு என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜாக் டோா்ஸி தெரிவித்துள்ளாா்.

அதிபா் தோ்தல் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப்பும், அவரை எதிா்த்து களமிறங்கும் ஜோ பிடனும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இத்தகைய சூழலில், பிரசாரம் தொடா்பான கட்டுரையின் இணைய இணைப்பை சுட்டுரைப் பதிவு வாயிலாக ஜோ பிடன் பகிா்ந்திருந்தாா்.

அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் உறுதித்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து அதற்கான லிங்க்கை சுட்டுரை நிா்வாகம் நீக்கியது. எனினும், சுட்டுரை நிா்வாகத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதையடுத்து, சிஇஓ ஜாக் டோா்ஸி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சுட்டுரையில் உண்மையான தகவல்கள் பகிரப்படுவதை உறுதி செய்து வருகிறோம். எனினும், சம்பந்தப்பட்ட கட்டுரைக்கான இணைய இணைப்பை நேரடியாக நீக்கியது தவறுதான். அதன் காரணமாக, நிா்வாகத்தின் செயல்பாட்டு விதிமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com