
கோப்புப் படம்
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 1.16 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 4,00,45,513-யாக உயா்ந்துள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 83,45,317 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 74,94,551 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11,15,775 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 2,24,295 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...