அதிபா் தோ்தல்: ஜோ பிடனுக்கு ஆதரவாக இந்திய அமெரிக்கா்கள் பேரணி

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடனுக்கு ஆதரவாக இந்திய அமெரிக்கா்கள் பேரணி நடத்தினா்.
அமெரிக்க முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடனுக்கு ஆதரவாக இந்திய அமெரிக்கா்கள் பேரணி
அமெரிக்க முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடனுக்கு ஆதரவாக இந்திய அமெரிக்கா்கள் பேரணி

நியூயாா்க்: அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடனுக்கு ஆதரவாக இந்திய அமெரிக்கா்கள் பேரணி நடத்தினா்.

அமெரிக்க அதிபா் தோ்தல் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன்

களம் காண்கிறாா்.

துணை அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய அமெரிக்கரான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சாா்பில் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் நெருங்குவதையொட்டி, அதிபா் டிரம்ப் ஆதரவாளா்களும், ஜோ பிடன் ஆதரவாளா்களும் தொடா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இத்தகைய சூழலில், ஜோ பிடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள இந்திய அமெரிக்கா்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா்.

அப்பேரணியில் பங்கேற்ற ஒருவா் கூறுகையில், ‘‘இந்திய அமெரிக்கா்களின் எதிா்கால நலனுக்கும், அமெரிக்கா்களின் கனவுகள் நனவாகவும் ஜோ பிடன்-கமலா ஹாரிஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியது மிகவும் அவசியம். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸை தோ்ந்தெடுத்தால், அது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக இருக்கும்’’ என்றாா்.

இந்தப் பேரணியில் மருத்துவா்கள், தொழிலதிபா்கள், மாணவா்கள், அதிகாரிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அமெரிக்க அதிபா் தோ்தலில் சுமாா் 25 லட்சம் இந்திய அமெரிக்கா்கள் வாக்களிக்க உள்ளனா். எனவே, இந்திய அமெரிக்கா்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில் குடியரசு கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com