இனவெறித் தீயில் எண்ணெயை ஊற்றுகிறார் டிரம்ப்: ஜோ பிடன் குற்றச்சாட்டு

'இனவெறித் தீயில் எண்ணெயை ஊற்றுகிறார்' என்று ஜோ பிடன் குற்றம்சாட்டியதை அடுத்து, எனக்கு இனவெறி எண்ணம் இல்லை என்று டிரம் கூறினார்.
ஜோ பிடன் - டொனால்ட் டிரம்ப்
ஜோ பிடன் - டொனால்ட் டிரம்ப்


வாஷிங்டன்: 'இனவெறித் தீயில் எண்ணெயை ஊற்றுகிறார்' என்று ஜோ பிடன் குற்றம்சாட்டியதை அடுத்து, எனக்கு இனவெறி எண்ணம் இல்லை என்று டிரம் கூறினார். அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இரண்டு பேரும் இனவெறி குறித்து கடுமையாக பேசினர். 

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில், குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டிடுகிறாா்.

இந்த நிலையில் ஜோ பிடனுடனான இறுதிகட்ட நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதம் டென்னசேயில் உள்ள நாஷ்வில்லேயில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் டிரம்பும், முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் இனவெறி குறித்து வார்த்தைகளால் மோதினர்.

ஜோ பிடன், "நவீன வரலாற்றில் நாங்கள் கொண்டிருந்த மிக இனவெறி அதிபர்களில் ஒருவர் டிரம்ப்" என்று குறிப்பிட்ட பிடன், ”டிரம்ப்” ஒவ்வொரு இனவெறி நெருப்பிலும் எண்ணெயை ஊற்றுகிறார், ”என்று பிடன் கூறினார்.

டிரம்ப்: பிடன் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் நீதி தொடர்பான பிரச்னைகளை புறக்கணிப்பதாகவும், "பல்லாயிரக்கணக்கான கருப்பின மக்களை சிறையில் அடைக்கும் குற்ற மசோதாவைத் தவிர பிடன் எதுவும் செய்யவில்லை." மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின அமெரிக்கர்களுக்காக நல்லது செய்தது தான் மட்டுமே என்று கூறிய டிரம்ப், தான் கையெழுத்திட்ட குற்றவியல் நீதி சீர்திருத்த சட்டம் மற்றும் காற்று மண்டலம் மாசு அடைவதை தடுப்பதற்கு தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். நான்கு ஆண்டுகள் துணை அதிபராக இருந்த பிடன், இனவெறியை எதிர்த்து எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். 

பிடன்: டிரம்பின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய பிடன், 1994 ஆம் ஆண்டு குற்ற மசோதாவுக்கு ஆதரவளித்ததாகவும், இந்த சட்டத்தின் மூலம் "கருப்பின சமூகத்திற்கு தீங்கு விளைவித்தார். "இந்த விவகாரத்தில் உண்மை என்னவென்றால், அமெரிக்காவில் நிறுவன இனவெறி உள்ளது," பிடன் கூறினார். அமெரிக்காவின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேச மறுப்பதாகவும்,  அமெரிக்கர்களின் வருமானம் குறைந்ததற்கு டிரம்பின் அலட்சியமான நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டிய பிடன்,  டிரம்பை போல் ஒரு கட்சித் தலைவராக செயல்படாமல் பாகுபாடற்ற அதிபராக தாம் செயலாற்றுவேன் என்றார். 

டிரம்ப்: நவம்பர் 3 ஆம் தேதிக்கு முன்னரே கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க வாய்ப்பில்லை. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தயாரானதும் ராணுவத்தின் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். 

பிடன்: கரோனா நோய்த்தொற்றை எதிர்த்து போராட டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லை. அவரிடம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் உள்ளது, அமெரிக்காவில் மேலும் 2 லட்சம் பேர் தெற்று பாதிப்பால் உயிரிழப்பார்கள். தளர்வுகளை வழங்கும் டிரம்ப், தொற்று பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாளவில்லை. ஜனவரி மாதமே தொற்று பற்றி தெரிந்திருந்தும் ஏன் உடனே சொல்லவில்லை, அவர் எதற்காக முகக்கவசம் அணிய மறுக்கிறார். தொற்று பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழக்க காரணமான அதிபர் டிரம்ப் பதவியில் நீடிக்கக் கூடாது.

டிரம்ப்: தொற்று பாதிப்பால் உயிரிழப்போர் விகிதம் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 99 சதவீதம் இளைஞர்கள் குணமடைந்துள்ளனர். 

பிடன்: அதிபராக தேர்வானால் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வருவோம். முகக்கவசத்தை கட்டாயமாக்குவேன். கரோனா தொற்றை முடக்குவோம், நாட்டை முடக்கமாட்டோம். நோய்த்தொற்று பரவலை கையாள்வதில் டிரம்ப் அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

டிரம்ப்: கரோனா உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளது. அரசின் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பல உயிரிகள் காப்பாற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தொற்று பரவ சீனாவே காரணம். நாட்டை முடக்கிய போது தவறு எனக்கூறிய பிடன், தற்போது முன்கூட்டியே ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்கிறார். ஊரடங்கை தவிர வேறு எதுவும் பிடனுக்கு தெரியாது. பன்றிக்காய்ச்சல் வந்த போது துணை அதிபராக இருந்த பிடன் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பிய டிரம்ப், அவரை போன்று என்னால் முடங்கி இருக்க முடியாது.

பிடன்: சீனாவில் டிரம்புக்கு ரகசிய வங்கி கணக்குகள் உள்ளது. 

டிரம்ப்: அதிபராகும் முன்பே சீன வங்கி கணக்கை முடித்துவிட்டோம். சீனா, ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து பணம் எதுவும் பெறவில்லை. வடகொரிய விவகாரத்தை ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார். இந்த விவகாரத்தில் தமது நடவடிக்கை காரணமாக வடகொரியா உடனான போர் தடுத்து நிறுத்தப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் நல்லுறவு பேணப்பட்டு வருவகிறது. ஒபாமா செய்யாததை நாங்கள் செய்தோம். 

பிடன்: டிரம்ப் தன்னுடைய வரியை கட்டவில்லை.  

டிரம்ப்: கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்திவிட்டேன். பிடனை பொறுத்தவரை மாற்றி மாற்றி பேசக்கூடியவர் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து பணம் ஈட்டியவர். தனது தந்தை ஒரு செல்வந்தர் என்றும் தொழிலதிபராக நியாயமான முறையில் பணம் சம்பாதித்ததாகவும் தெரிவித்த டிரம்ப், வரி செலுத்தியதற்கான கணக்கை விரைவில்  வெளியிடுவேன் என உறுதியளித்தார். 

பிடன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த நாடு தலையீட்டாலும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறிய பிடன், ரஷ்யா குறித்து டிரம்ப் பேச மறுப்பது ஏன் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com