கொலம்பியா துணைத் தலைவருக்கு கரோனா பாதிப்பு

கொலம்பியா துணைத் தலைவர் மார்டா லூசியா ராமிரெஸ்க்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 
Colombian Vice President tests Covid-19 positive
Colombian Vice President tests Covid-19 positive

கொலம்பியா துணைத் தலைவர் மார்டா லூசியா ராமிரெஸ்க்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 

மணிசலேஸில் உள்ள ஆளுநர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். இதன் விளைவாக நேற்று கரோனா சோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

கடவுளுக்கு நன்றி. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தற்போது  மருத்துவர்களின் ஆலோசனையின்படி அடுத்த 15 நாள்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்துதலில் இருக்கப்போகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைச் சோதனைசெய்துகொள்ளுங்கள் என்றார்.

கொலம்பியாவில் இதுவரை 9,90,270 பேர் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,636 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com