
Police man killed as tractor hits bike in UP's Fatehpur
உத்தரப் பிரதேசத்தில் சீதாபூர் கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் காவலர் பலியாகியுள்ளார்.
தரியாவ் காவல் நிலையத்தின் கீழ் புதன்கிழமை மாலை நடந்த விபத்தில் காவலர் விஷால் யாதவ் (24) உயிரிழந்தார். டிராக்டரில் உள்ள வெளிச்சம் தரும் விளக்குகள் எரியாததே விபத்துக்குக் காரணம் என்று வட்ட அலுவலர் அனில் குமார் தெரிவித்தார்.
ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பலத்த காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த யாதவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குமார் கூறினார்.