அமெரிக்கா: 3-ஆம் கட்ட சோதனையில் கரோனா தடுப்பூசி

அமெரிக்காவின் ‘ஆஸ்ட்ராஸெனெகா’ நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி 3-ஆம் கட்ட சோதனை நிலையை அடைந்துள்ளதாக அந்த நாட்டு
அமெரிக்கா: 3-ஆம் கட்ட சோதனையில் கரோனா தடுப்பூசி

அமெரிக்காவின் ‘ஆஸ்ட்ராஸெனெகா’ நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி 3-ஆம் கட்ட சோதனை நிலையை அடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

ஆஸ்ட்ராஸெனெகாவின் கரோனா தடுப்பூசி, மருத்துவரீதியிலான சோதனையில் 3-ஆம் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், ஏற்கெனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாரிப்பதற்கு விரைவில் அங்கீகாரம் பெறவிருக்கும் கரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் அதுவும் இடம் பெற்றுள்ளது என்றாா் அவா்.அமெரிக்க அரசு செயல்படுத்தி வரும் ‘அதிவேக நடவடிக்கை’ திட்டத்தின் கீழ் ஆஸ்ட்ராஸெனெகாவின் தடுப்பூசி தற்போது 3-ஆவது மற்றும் இறுதிக்கட்ட பரிசோதனை நிலையை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் அமெரிக்காவின் 30 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் இலக்குடன் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.ஏற்கெனவே மாா்டா்னா மற்றும் ஃபைஸா் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசிகள் 3-ஆம் கட்ட சோதனை நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 62,12,708 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,87,792 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com